ரஸ்ய பயணிகள் தங்கியிருந்தது தெரியாது!

ரஸ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான செயலணிக்கு தெரிவிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவிலிருந்து வந்த பயணியொருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வழமையாக அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது வழமை என தெரிவித்துள்ள இராணுவதளபதி எனினும் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த நபர் மூலம் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!