தியாகதீபம் நினைவேந்தல் நாள் இன்று!

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் ஆலய முன்றலில், தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 12 நாட்களாக நீராகாரமும் இன்றி போராட்டத்தை முன்னெடுத்த அவர், செப்ரெம்பர் 26ஆம் திகதி காலை உயிர்துறந்தார்.

திலீபனின் தியாகத்தை நினைவேந்தல் செய்யும் வகையில் தமிழ் மக்கள் 12 நாட்களையும் நினைவு நாட்களாக அனுசரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் பொலிசாரின் மூலமாக நீதிமன்றக் கட்டளைகளைப் பெற்று தடை விதித்துள்ளனர்.எனினும் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் உணர்வு ரீதியாக இந்த நினைவுகூரலில் ஒன்றுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!