நேற்றும் 12 பேருக்கு கொரோனா!

நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும், யுக்ரைனில் இருந்து வந்த 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்த இருவருக்கும், அல்பேனியாவில் இருந்து வந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,345 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மாத்தறையில் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட ரஷ்ய விமானப் பணியாளருக்கு அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!