அரசியல் தலைவர்கள் எழுந்து நின்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலயத்தின் இன்று (26) காலை ஆரம்பிக்கப்பட்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் திலீபன் சாவடைந்த 10.48 மணிக்கு சகல கட்சிகளின் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!