கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான கட்டடங்கள்.

கண்டியில் ஆபத்தான மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான மற்றும் சட்டவிரோத கட்டடங்களை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் 21 பொறியியலாளர்களைக் கொண்ட இந்த குழு ஏற்கனவே தங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து கட்டுமானங்களிலும் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆபத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்காக கட்டுமான உரிமையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்குவதே முதல் படியாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார்.

கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.

குறித்த கட்டடம் தொடர்பான இறுதி அறிக்கை திங்கட் கிழமை பெறப்படும் என்று இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!