24 மணிநேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று!

இன்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும் ஓமானில் இருந்து வந்த 7 பேருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3373 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!