லண்டனில் பார்வையாளர்களிடம் மனம் புண்படும் படி நடந்துகொண்ட கிளிகள்: நிர்வாகம் எடுத்த முடிவு!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லின்கோல்ன்ஷைர் என்ற உயரியல் பூங்காவில் கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன. இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு புகார் எழுந்தது.

ஒரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்யும், மற்றொரு கிளி பார்வையாளரை பார்த்து சிரிக்கும், இன்னொரு கிளி மரியாதை குறைவாக பேசும். மனம் புண்படும் படி கிளிகள் நடந்து கொண்டதாக பார்வையாளர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றாலும் நிர்வாகத்தினர் அவற்றை தனியாக வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் குறிப்பாக அனைத்து வகையான சத்தங்களிலிருந்தும் குரல்களைக் கற்றுக்கொள்வதில் திறமையானவை என்று பூங்கா நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!