‘குற்றவாளிகளுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது பா.ஜ.க’ – பாபர் மசூதி தீர்ப்பு குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டதீர்ப்பு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இது ஒரு கருப்பு தினம் என விமர்சித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அசாதுதீன் ஓவைசி குறிப்பிடுகையில், “இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள்.

சதிச் செயல் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இதற்கு எத்தனை நாட்கள் எத்தனை மாதங்கள் தயாரிப்பு தேவைப்படும் என விளக்குங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது” எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!