நிமோனியாவில் அவதிப்பட்ட 6 மாத குழந்தைக்கு காச்சிய இரும்பால் சூடு வைத்த பெற்றோர்!

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் நிமோனியாவில் அவதிப்பட்டு வந்த 6 மாத குழந்தைக்கு காச்சிய இரும்பால் பெற்றோர் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் ஹூடிகுடா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 6 மாத குழந்தை ஒன்று நிமோனியா நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளது.

நாட்டு மருந்து அளித்து குழந்தையை குணப்படுத்தலாம் என கூறி, மருத்துவமனை எதையும் நாடாமல் அந்த பெற்றோர் இருந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையின் நிமோனியா தாக்கம் அதிகரித்ததை அடுத்து உள்ளூர் கிராமவாசிகளின் அறிவுரைப்படி காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர்.

இதனிடையே குழந்தையின் நிலை மிக மோசமானதையடுத்து நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பித்துள்ளதாகவும் குழந்தையின் அடிவயிறு, தொடை மற்றும் பாதங்கள் என பல பகுதிகளில் வெந்துபோயிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பிஞ்சு குழந்தையை சித்திரவதை செய்ததாக கூறி பெற்றோர் மீது பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!