கணவரை தேடி 41லட்சம் கிலோமீற்றர் பயணித்த மனைவி: கிடைக்குமா நீதி!

ஜனவரி மாதம் 2010ஆம் ஆண்டு 24ஆம் திகதி அன்று காணாமல் ஆக்கப்பட்ட காட்டூன் மற்றும் கட்டுரையாளரான பிரகீத் ரஞ்சன் எக்னெலிஹொடவைத் தேடத் தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், கணவரைத் தேடியலைத்த சந்தியா எக்னெலிஹொடவின் பயணதூரம் தொடர்பில் கணிப்பிடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கணிப்பிடலை ஸ்ரீலங்கா மும்மொழி ஊடகமொன்று மேற்கொண்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் பலதரப்பட்ட நபர்களைச் சந்தித்தும், பல அமைப்புக்களிடம் முறையிட்டும் தனது கணவருக்கு என்ன நேர்ந்தது? எதற்காக கடத்தப்பட்டார்? யாரால் இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்காக, நீதியை அடைவதற்காக நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கின்றார்.

10 வருடங்களாக அவர் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கின்றார் என்பதை கிலோமீற்றர்கள் அடிப்படையில் கணிப்பிட முடிந்துள்ளது. ஸ்ரீலங்காவிலுள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்றுவந்த தூரத்தை அளவிட Google Maps மற்றும் Free Map Tools களைப் பயன்படுத்தி தகவலைப் பெற முடிந்துள்ளது.

அதனடிப்படையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றம், அவிசாவளை நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், அரச நிறுவனங்கலான பொலிஸ் நிலையங்கள், இராணுவத் தலைமையகம், குற்றப் புலனாய்வுப் பிரிவு, மனித உரிமைகள் ஆணைக்குழு, செய்தியாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கண்காட்சிகள், மதத்தலங்கள், வெளிநாட்டு பயணங்கலான மனித உரிமைகள் ஆணைக்குழு, கண்காட்சிகள், விருதுகள் என சந்தியா எக்னெலிஹொட சென்றுவந்த இடங்களுக்கு இடையிலான தூரத்தை கணிப்பிட்டு பார்க்கையில்,

மொத்தமாக 411,220km நீதியை அடைவதற்காக சந்தியா எக்னெலிஹொட பயணித்திருக்கிறார்.

நீதிமன்றம் 7032 கிலோமீற்றர், அரச நிறுவனங்கள் 1103 கிலோமீற்றர், பூஜைகளும் மதத்தலங்களும் 6897 கிலோமீற்றர், செய்தியாளர் சந்திப்புக்கள் 960 கிலோமீற்றர், ஆர்ப்பாட்டங்கள் 18, 868 கிலோமீற்றர், கண்காட்சிகள் 1000 கிலோமீற்றர் மற்றும் வெளிநாட்டுப்பயணங்கள் 375 360 கிலோமீற்றர் என அவரது நீதிக்கான தேடலுக்கான அமைந்திருக்கின்றது.

இந்த மதிப்பிடலானது ஒரு சாதாரண மதிப்பிடலே ஆனால் உண்மையில் அவருடைய தேடல் பயணம் இதனை விட அதிகமாகவே இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!