தீவிர கணகாணிப்பில் இருக்கும் அதிபர் டிரம்ப்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்புக்கு இலக்கான நிலையில், அவரது வயது மற்றும் அதிக உடல் எடை காரணமாக அவர் அதி தீவிர கணகாணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி டிரம்ப் தற்போது காய்ச்சலில் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்பழக்கம் மற்றும் மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்றாலும், நியூயார்க் நகரவாசியான டொனால்டு டிரம்ப் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணுபவரல்ல. மட்டுமின்றி, துரித உணவுகளை அதிகம் விரும்புபவரும், சோடா அதிகம் அருந்தும் பழக்கம் கொண்டவர் டொனால்டு டிரம்ப். மேலும், மருத்துவர்களால் உடல் பருமன் தொடர்பாக பல முறை எச்சரிக்கப்பட்டவர் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்க ஊடகங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, ஜனாதிபதி டிரம்ப் சமீப காலமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார், இது ஜனாதிபதி அலுவலகத்தின் மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களில் அவரது குரலில் மாறுதல் இருந்ததாகவும், அது கொரோனா பாதிப்பால் நேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுவரை லேசான அறிகுறிகளே தென்பட்டாலும், தற்போது ஜனாதிபதி டிரம்ப் காய்ச்சலால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் அவரது உடல் நிலை மோசமடைந்தால், அது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நிலையும் இதேப்போன்று இருந்ததாகவும், திடீரென்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியது. டிரம்பை பொறுத்தமட்டில் அவரது வயது மற்றும் உடல் பருமனே மிகப்பெரிய ஆபத்து காரணியாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 14 நாட்கள் மிகவும் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!