தொடரும் கொடூரங்கள்: கற்பழிக்கப்பட்டு உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண் படுகொலை!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் அங்குள்ள ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவருடைய எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கூட சடலத்தை ஒப்படைக்காமல் போலீசார் இரவோடு இரவாக அதை எரித்தது மட்டுமின்றி, அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என மறுநாள் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது குடுத்தினருக்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் மற்றொரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெகத் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண் உடல் அப்பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் கிடந்து மீட்கப்பட்டது.

பெண்ணின் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு சிதறிக் கிடந்தன. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். இப்பெண்ணின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலப்பிரச்னை தொடர்பாக அவர்களின் உறவினர்கள் இருவரே இக்கொடூரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!