காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது டிரைவர் காரை ஓட்டினார். காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண் தனது கண்புருவம் மற்றும் கண்ணை கருப்பு பென்சிலால் மையிட்டு அழகுபடுத்தி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத வகையில் இளம்பெண் சென்று கொண்டிருந்த கார், முன்னால் சென்ற வாகனம் மீது திடீரென மோதியது. இதனால் பென்சிலால் கண் மை போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் இடது கண்ணுக்குள் அந்த பென்சில் குத்தி சொருகியது. இதனால் வலியால் அந்த பெண் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் அந்த பெண்ணை வேறொரு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள் அவருடைய கண்ணில் சொருகியிருந்த பென்சிலை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக முக்கிய நிகழ்ச்சிகள் அல்லது அலுவலகங்களுக்குச் செல்லும போது சில பெண்கள் வீட்டிலேயே அலங்காரம் செய்து கொள்ளாமல், போகும் வழியில் செல்லும் வாகனங்களில் மேக்-அப் போடும் பழக்கம் உலகம் முழுவதிலுமே உள்ளது. இந்த சம்பவத்தை படித்த பிறகாவது பெண்கள் இனி எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!