சேனாரத்னவின் பதவி பறிப்பு; அஜித் ரோஹணவுக்கு பதவி!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்குப் பதிலாக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண புதிய பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் முரண்பாடான அறிக்கைகளை இரு சந்தர்ப்பங்களில் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டமை தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விமர்சனம் வெளியிட்டதன் பின்னணியில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் மல்கம் ரஞ்சித்தின் விமர்சனத்தை அடுத்து சிஐடி பொறுப்பதிகாரியம் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!