உலகநாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவின் புதிய ஏவுகணை!

நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்லக் கூடிய உலகின் மிகப் பெரிய அணுஆயுத ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் அச்சுறுத்தும் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணையை உலகின் வல்லரசு நாடுகளாலும் இலக்கு வைத்து தாக்கி அழிக்க முடியாது என்பது மட்டுமின்றி, ஏவுகணை எதிர்ப்பு வலையங்களை தகர்க்கும் சக்தி கொண்டவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடகொரியாவில் முன்னெடுக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் தொடர்புடைய விழாவில் உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறவிருக்கும் Hwasong-16 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த Hwasong-16 ஏவுகணை தொடர்பில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பலர் வெளியிட்டுள்ள கருத்துகள், பீதியை கிளப்பியுள்ளது. குறித்த ஏவுகணையானது வடகொரியாவால் உண்மையில் சாத்தியமாகியுள்ளது என்றால், அது அமெரிக்காவுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்கிறார் Xu Tianran என்ற அணுஆயுத ஆய்வாளர். மேலும், இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவின் எந்த ஒரு மாநிலத்தையும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த Hwasong-16 ஏவுகணை.

அதாவது, வடகொரியாவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவிய சில நொடிகளில் நியூயார்க் மாகாணமும் அங்குள்ள மக்கள் தொகையில் இரண்டரை மில்லியன் பேர் மொத்தமாக பஸ்பம். மட்டுமின்றி, 4 மில்லியன் அளவுக்கு மக்கள் காயங்களுடன் தப்புவார்கள் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விழாவில் பேசிய வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தேசத்தின் பாதுகாப்புக்கு இன்னும் பல ஏவுகணைகளை உருவாக்குவோம் எனவும்,

இதுவரை உங்கள் மகத்தான நம்பிக்கைக்காக எதையும் திருப்பித்தரவில்லை என்பதை அறிந்து வெட்கப்படுகிறேன், நமது மக்களை கடினமான வாழ்வாதாரத்திலிருந்து வெளியே கொண்டு வர எனது முயற்சிகளும் அர்ப்பணிப்பும் போதுமானதாக இல்லை எனவும் கிம் ஜாங் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வடகொரியா போன்ற ஒரு ஏழை நாட்டுக்கு இத்தனை சக்திவாய்ந்த ஒரு ஏவுகணை தேவையா என்ற கேள்வியும் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!