சந்தேக நபர்களுக்கு பிணை நிராகரிப்பு!

முல்லைத்தீவு – முறிப்பு காட்டில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்த நிலையில், நேற்று இந்த வழக்கு, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் ஊடகவியலாளர்களைத தாக்கியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க, சட்டத்தரணிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதற்கு, ஊடகவியலாளர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

பொலிஸ் தரப்பிலும் பிணை விண்ணப்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், இவர்களுக்கு பிணை வழங்கினால், கைது செய்யப்பட வேண்டிய ஏனைய இரண்டு பேரையும் கைது செய்வதில் தடைகள் ஏற்ட வாய்ப்புகள் உள்ளதாகவும், எடுத்துக் கூறப்பட்டது.

இதையடுத்து, பிணை விண்ணப்பத்தை நிராகரித்த முல்வைத்தீவு நீதிமன்றம், இரண்டு சந்தேக நபர்களினதும் விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!