கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு: முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பு!

பணியின்போதும், கரோனாவாலும் உயிரிழந்த காவலர்களின் நினைவாக ‘வீரக்காவலர்கள்’ நினைவு கல்வெட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்தியபாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த நாள், காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும்நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையில், பணியின்போது 1950-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 151 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தஆண்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர்ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ளதமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், ‘வீரக்காவலர்கள்’ என்றநினைவு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் நீரூற்றைத் திறந்து வைத்து, மரக்கன்றையும் நட்டார்.தமிழக காவல்துறை வீரர்கள்151 பேரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நினைவுருவக் கற்களில் அவர்களின் உருவம்,பீடத்தைச் சுற்றி பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!