தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ஆசிரியரை கௌரவித்த பிரான்ஸ் அரசு!

பிரான்சில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பாட்டி மரணத்திற்குப் பின் பிரான்சின் மிக உயர்ந்த விருதான ‘the Legion of Honor’ விருது வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்துள்ளார். 47 வயதான வரலாற்று பாட ஆசிரியரான சாமுவேல் பாட்டி, முஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை மாணவர்களுக்குக் காட்டியதாற்காக Chechen பகுதியைச் இளைஞரால் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி இளைஞரை கைது செய்ய முயன்ற போது பொலிசார் அவனை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட ஆசிரியருக்காக பிரான்ஸ் முழுவதிலுமுள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சாமுவேல் பாட்டி மரணத்திற்குப் பின் அவருக்கு ‘the Legion of Honor’ வழங்கப்படும், மேலும் அவர் Academic Palms-க்கான தளபதியாக நியமிக்கப்படுவார் என்று கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்துள்ளார்.

1802 ஆம் ஆண்டில் பிரான்ஸ் இராணுவத் தலைவர் நெப்போலியன் போனபார்ட்டால் அமைக்கப்பட்ட பிரான்சின் பொதுமக்கள் அல்லது இராணுவத் தகுதிகளுக்கான மிக உயர்ந்த விருது ‘the Legion of Honor’ ஆகும். கல்வித் தகுதிகளுக்கான தேசிய விருதான The Order of Academic Palms 1808-ல் போனபார்ட்டால் நிறுவப்பட்டது. விருது வழங்கும் விழா புதன்கிழமை மாலை சோர்போன் பல்கலைக்கழகத்தில் தேசிய அஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!