பெற்றோர் திருமணம் செய்துவைக்காத விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சோந்தவர் இளைஞர் மணி. 26 வயதாகும் இவர் தனக்கு திருமணம் நடத்திவைக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறிவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதற்கு ஏற்பாடு செய்யாததால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த மணி திடீரென ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாகப் பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பதாகக் கூறி கத்தியால் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். இதனால் பெற்றோர், உறவினர்கள் அவரை தடுக்க போராடிய போதும் சிறுதி நேரத்தில் கழுத்தையும் அறுத்துள்ளார்.

தகவலறிந்துவந்த கமுதி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து மணியை மீட்டனர். அப்போது கழுத்து, வயிற்றுப் பகுதியில் காயங்களுடன் இருந்ததால் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இளைஞர் மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணம் செய்துவைக்கக்கோரி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!