தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுவன்!

புதுக்கோட்டை நகராட்சியில் குப்பை அள்ள பயன்படுத்தும் மூன்று சக்கர குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தை 13 வயது சிறுவன் ஒட்டி சென்றதால் பரபரப்பு. புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தினசரி துப்புரவு பணி மேற்கொள்ள 216 நிரந்தர துப்புரவு பணியாளர்களும் 200 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களும் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அள்ளுவதற்கு ஏதுவாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டு 10 மூன்று சக்கர குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களும் 2019ஆம் ஆண்டு 54 மூன்று சக்கர குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் என மொத்தம் 64 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது, இந்த வாகனங்கள் மூலம் துப்பரவு பணியாளர்கள் தினசரி ஒவ்வொரு வார்டுக்கு சென்று குப்பைகளை சேகரித்து திருக்கட்டளை சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த நகராட்சி துப்புரவு பணியாளர் பீட்டர் என்பவருக்கு வழங்கப்பட்ட மூன்று சக்கர குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தை அவரது உறவினரான 13 வயது சிறுவன் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாதுகாப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை துப்புரவு பணியாளர்களை தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நகராட்சியினர் கூறியுள்ள நிலையில் துப்புரவு பணியாளரின் உறவினரான 13 வயது சிறுவன் அந்த குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த சிறுவனிடம் நாம் கேட்டபோது தனது மாமா நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணி செய்து வருவதாகவும் அவருக்கு தேவையான சாக்குப் பைகளை வாங்க இந்த வாகனத்தை எடுத்து செல்ல சொன்னதாகவும் அதன்படியே இந்த வாகனத்தை அவர் ஓட்டி வந்ததாகவும் துப்புரவு பணி செய்ய நான் செல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!