கொரோனா ஆபத்து அதிகம்!

கொவிட் பரவல் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என எச்சரித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கொத்தணிகள் அதிகரித்து வரும் அதேவேளை பரவுதலிற்கான சாத்தியக்கூறுகள் பரந்துபட்டவையாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரையும அதிகாரிகளால் இனம் காணமுடியாத நிலையேற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தையில் பாதிக்கப்பட்டவர்களின் சகாக்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு சுகாதார தரப்பினர் தீர்மானித்துள்ளனர் என சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்

. பேலியகொட கொத்தணியிலிருந்து பெருமளவான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பேலியகொட கொத்தணியை சமூகபரவல் என கருதமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பேலியகொட கொத்தணி மிகவும் பரந்துபட்டதாக – நாடளாவிய ரீதியில் நோயாளிகளை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது என சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!