கனேடிய நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு கதறிய 24 வயது கொலையாளி!

கனடாவின் மார்க்கம் பகுதியில் பெற்றோர் மற்றும் சகோதரி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய இளைஞர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார். குறித்த கொலை வழக்கில் இறுதி தீர்ப்புக்கான விசாரணை திங்களன்று பகல் காணொளி மூலம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அந்த 24 வயது இளைஞர், எனது செயல்களால் தாக்கத்தை ஏற்படுத்திய அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். குறிப்பாக எனது குடும்பத்தை அறிந்தவர்களுக்கு – எனக்குத் தெரிந்த நண்பர்களும் அன்பானவர்களும் இதுபோன்ற ஒரு விடயத்தை என்னிடமிருந்து ஒருபோதும் அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது.

என்னை மன்னித்துவிடுங்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், காஸில்மோர் அவென்யூ பகுதியில் இருந்து அவசர உதவிக்குழுவினருக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. ஆனால் குடியிருப்புக்கு உள்ளே சென்று பார்த்த பொலிசார், உடனடியாக Menhaz Zaman-ஐ கைது செய்துள்ளனர்.

அந்த குடியிருப்பில், ஜமானின் 50 வயதான தாய் மும்தாஸ் பேகம், 59 வயதான தந்தை மோனிருஸ் ஜமான், 70 வயதான பாட்டி ஃபிரோசா பேகம் மற்றும் அவரது 21 வயது சகோதரி மலேசா ஜமான் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் சடலமாக காணப்பட்டனர். இணையம் வழியான விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட ஜமான், கொலை தொடர்பில் தமது சக தோழர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் ஜமான் மீதான குற்றம் நிரூபணமான நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவரால் பிணையில் வெளிவர முடியாது என கூறப்படுகிறது. மட்டுமின்றி, அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவர் பிணை கேட்டு விண்ணப்பிக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசாரை Menhaz Zaman என்ற இளைஞரே வரவேற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!