குருநகரில் 36 பேருக்கு இன்று பிசிஆர் சோதனை!

குருநகர் பகுதியில், இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், குறித்த நபர்களுடன் ஏற்கனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, குருநகர் – பாசையூர் மீன் சந்தைகளில் இன்று தொடக்கம் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுமெனத் தெரிவித்த யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.

எனவே குருநகர் – பாசையூர் மீன் சந்தை பகுதிக்கு வரும் யாராக இருப்பினும், அவர்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமெனவும், மேயர் தெரிவித்தார்.

மேலும், குருநகர் – பாசையூர் சந்தைக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற்கொண்ட பின்னரே, அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!