பிரித்தானியாவில் பிரிந்து சென்ற கணவனை தேடிச்சென்ற மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பிரித்தானியாவில் மூன்று மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற கணவனைத் தேடி அவரது வீட்டுக்கு சென்ற அவரது மனைவிக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த Lydnsey Rolt (60)ம் அவரது கணவர் James (42)ம் மூன்று மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையில் மனைவிக்கு சில உதவிகளை செய்வதாக குறுஞ்செய்தியில் உறுதியளித்த Lydnseyயின் கணவர் James, ஐ லவ் யூ, உன்னுடன் மீண்டும் இணைந்துவாழ்வது குறித்து யோசிக்கிறேன் என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

குறுஞ்செய்திகளைப் பார்த்ததும், எப்படியாவது மீண்டும் கணவருடன் சேர்ந்துவிடலாம் என்ற நப்பாசையில் கணவரை சந்திக்கச் சென்றுள்ளார் Lydnsey. ஆனால், கணவர் வீட்டுக்கதவைத் தட்டியதும், Chantelle Peers என்ற பெண் கதவைத் திறந்திருக்கிறார். James வேறொரு பெண்ணுடன் வாழ்கிறார் என்று ஏற்கனவே அவரது நண்பர்கள் Lydnseyக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். எனவே, எது உண்மை என்பதை நேரடியாக கேட்டு ஒரு கை பார்த்துவிடலாம் என முடிவு செய்துதான் Lydnsey கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு வேறொரு பெண் இருக்க, இவர் கணவரைப் பார்க்கவேண்டும் என்று கூற, அந்த பெண் மறுக்க, அதற்குள் James அங்கு வர அவரிடம் சண்டையிட்டு, அவரது நெஞ்சில் நகத்தால் குத்தி, அவரைப் பிடித்து தள்ளியிருக்கிறார் Lydnsey. பின்னர் Lydnsey கைது செய்யப்பட்டார். சிறிது காலம் காவலில் அடைக்கப்பட்டபின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அவரது கணவர் அனுப்பிய குறுஞ்செய்திகள் முதலான அனைத்து விவரங்களையும் கவனமாக கேட்டுள்ளார்.

Lydnsey எப்படியாவது கணவனுடன் சேர்ந்து விடவேண்டும் என்ற ஆசையில் இருந்ததையும், அவாது கணவரும் குறுஞ்செய்திகள் மூலம் நம்பிக்கையளிக்கும் செய்திகளையும் அனுப்பியதையும், ஆனால், அவர் ஏமாற்றமடைந்ததையும் சட்டத்தரணி நீதிபதியிடம் விவரித்தார்.

அத்துடன், Lydnsey இப்படிப்பட்ட குணமுடையவர் அல்ல என்றும், ஏற்கனவே சில காலம் காவலில் அடைக்கப்பட்டதையும், இதற்கு முன் எந்த குற்றச்செயலிலும் ஈடுபட்டதில்லை என்பதையும் தான் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார் நீதிபதி. ஆகவே, Lydnseyக்கு 100 பவுண்டுகள் அபராதம் மட்டும் விதித்ததுடன், அவர் தன் கணவரை ஐந்து ஆண்டுகளுக்கு சந்திக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!