அயர்லாந்தில் இருந்து தனது மகளை பார்க்க வந்த பாசத்தாய்: வந்த இடத்தில் கண்ட காட்சி!

அயர்லாந்தில் இருந்து நான்கு வயது மகளைப் பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்த தாய்க்கு காத்திருந்த செய்தி, அவரை சுக்கு நூறாய் நொறுங்க வைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜிஷா, தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் பிரித்தானியாவின் அயர்லாந்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் நான்கு வயது மகளான மியா கேரளாவின் கோத்தநல்லூரில் தாத்த மற்றும் பாட்டியுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இவரை அழைத்துச் செல்வதற்காக ஜிஷா சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், கொரோனா விதிமுறைப் படி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், வந்தவுடன், ஜிஷா தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த தனிமைப்படுத்தப் பட்ட நாட்களில் அவர் தன்னுடைய மகளை பார்க்கவில்லை. இதையடுத்து தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்து மகளை பார்ப்பதற்காக சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மியா அங்கிருக்கும் கிணறு ஒன்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதன் காரணமாக அவரது உடல் அங்கிருக்கும் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியைக் கேட்டு, தாயாரான ஜிஷா சுக்கு நூறாக நொறுங்கி போனார். இது குறித்த தகவல் அயர்லாந்தில் இருக்கும் கணவர் ஜோமி மற்றும் மகன் டான் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் செவ்வாய் கிழமை கேரளா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் மியாவின் உடலை தாய் ஷிஜா ஒரு முறை பார்க்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இறுதி சடங்கில் தந்தை-மகன் இருவரும் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தெளிவான தகவல் இல்லை. மியாவின் இறுதிச் சடங்கு வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தெல்லித்தோட் இடுகி செயின்ட் ஜோசப் நனாயா கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!