லண்டனில் ஒரேநாளில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்!

லண்டனில் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில், 14 மணி நேரத்திற்குள் மூன்று இடங்களில் நடந்த சம்பவங்களில் ஒரு இடத்தில், மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் பலியாகியுள்ளார். பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் தலைநகரான லண்டனில் கடந்த 29-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 4.58 மணியளவில் Wandsworth-ல் இருக்கும் ஷாப்பிங் செண்டருக்கு வெளியே, சிறுவர்கள் மோதிக் கொண்ட மிகப் பெரிய சண்டையில், 15 வயது சிறுவன் கத்தி குத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மேலும் இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அதில் ஒரு நபருக்கு 19 வயது இருக்கும் என்றும், மற்றொரு நபருக்கு 17 வயது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இப்போது பொலிசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி லண்டனில் அதே நாளில் Seven Sisters இரயில் நிலையத்தில், சுத்தியலை வைத்து அங்கிருக்கும் நபர் ஒருவர், இரண்டு பேரை மோசமாக தாக்கியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு இரயில் நிலையத்தின் சுரங்கப்பாதையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், பொலிசார் இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு, குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் படி மக்களிடம் கேட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான இரண்டு பேரும் தற்போது மருத்துவ கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி மாலை 5 மணி மற்றும் 8 மணிக்கு என சம்பங்கள் அரங்கேற, இன்று அதிகாலை Isleworth பகுதியில் முகக்கவசம் மற்றும் கையில் ஆயுதமுடன் வந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த பெண் ஒருவர் மீது கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளான்.

அதன் பின் அந்த பெண் அவனிடம் இருந்து தப்பி பொலிசாருக்கு தெரிவிக்க, அந்த நபர் பொலிசாரிடம் சிக்கவில்லை. இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் மறுநாள் அதிகாலை சுமார் 14 மணி நேரத்திற்கு லண்டனில் கத்தி குத்து, கொள்ளை சம்பவம் மற்றும் மோசமான தாக்குதல் போன்ற பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!