தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்!

அமெரிக்காவை சேர்ந்த பெண் டெப்பி ஷுடாந்த் (50). இவரது தம்பி ஜோ (37). இவர்கள் 2 பேரும் 15 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தங்கள் ரகசிய திருமணத்தை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இவர்கள் சமீபத்தில் தான் உண்மையை கூறினர்.

இதுகுறித்து டெப்பி கூறும் போது, ‘‘நான் 3 வயதிலேயே ஒரு பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டேன். அப்போது எனது உண்மையான பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். 2003-ம் ஆண்டு கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தேன். அப்போது உனக்கு ‘ஜோ’ என்ற தம்பி இருக்கிறான் என எனது பெற்றோர் கூறினார்கள். அவனை முதலாவதாக சந்தித்த போது எனக்கு வயது 35, அவனுக்கு 23. அவனை பார்த்ததும் எனக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.

அதே உணர்வு அவனுக்குள்ளும் ஏற்பட்டதால் நாங்கள் ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்தோம். பின்னர் காதலர்களாக மாறி ஒன்றாக வசித்து வந்தோம். எங்கள் இருவரது உடம்பிலும் ஒரே ரத்தம் ஓடுகிறது என்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இதனால் எங்களுக்குள் அக்காள்-தம்பி என்ற உணர்வு ஒருபோதும் வந்ததில்லை’’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!