ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: மீண்டும் ஒரு சுஜித் சம்பவம்!

மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் உள்ள 3 வயது சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்தது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்த பெற்றோர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தம் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் எத்தனாவது அடியில் சிக்கியிருக்கிறார் என்பதை போலீசார் கண்டறித்தன. மேலும் சிறுவனின் குரல் கேட்க முடிவதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என கிராம மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது திருச்சியில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பெரும் போராட்டம் நடத்தியும் மீட்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பாக தொழில்நுட்பத்துடன் கருவி கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!