தொலைந்த திருமண மோதிரத்தினை தோட்டத்தில் அறுவடைச் செய்த விவசாயி!

gold-rings-at-carrotமூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார்.

ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது. காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை.

திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது.

குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பயிரிடப்பட்ட கரட் குறித்த மோதிரத்துடன் இணைந்து முளைத்துள்ளது. மீண்டும் கிடைக்காது என தான் நினைத்த குறித்த மோதிரம் தனக்கு கிடைத்தமையால் தான் மிகவும் அதிஷ்டசாலி என்று தெரிவித்துள்ளார்.

Tags: ,