இளம்பெண்ணின் உயிரை பறித்த செல்பி மோகம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனொரு கட்டமாக சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பிரபலமான ஜாம் கேட் சுற்றுலா தலத்திற்கு மக்கள் அதிகளவில் சென்றுவருகின்றனர். இந்நிலையில், இந்தூரில் வசித்துவந்த நீது மகேஸ்வரி என்ற 30 வயது இளம்பெண், தனது குடும்பத்தினருடன் ஜாம் கேட் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மலைகள் நிறைந்த இப்பகுதியில் ஆங்காங்கே நின்று ஜாலியாக புகைப்டம் எடுத்துள்ளனர். பின்னர் குரூப்பாகவும், தனியாகவும் செல்ஃபி எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பள்ளத்தாக்கின் முனையில் நின்று நீது மகேஸ்வரி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்,

அப்போது திடீரென்று அவர் அந்த பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், நான்கு மணி நேர தேடுதலுக்குப் பின் பள்ளத்தாக்கில் இருந்து நீது மகேஸ்வரி சடலமாக மீட்டுக்கொண்டு வந்தனர்.

இதனால் சுற்றுலா தலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனிடையே இளம்பெண் உயிரிழந்ததால் நீது மகேஸ்வரி குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!