டிரம்ப் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார்: ஜோ பைடன் நம்பிக்கை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார் எனவும் நாம்தான் வெற்றியாளர் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அதிபர் தேர்தலில் வெற்றியின் விளிம்பில் உள்ள ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ படைன் கூறுகையில், “ வாக்கு எண்ணிக்கை முடியும் போது நானும், கமலா ஹாரிசும் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்தல்சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றவர்தான், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த முடியும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது.

ஜோ பைடன் 253 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!