மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயகமே மக்களுக்கு பாதுகாப்பு!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவரின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகப் பெண்களுக்கும் பெருமை தருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஸுக்கும் டுவிட்டர் பதிவின் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் குமாரதுங்க, அமெரிக்க மக்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.

‘மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயக மும் அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்பாகும். ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்துக்கும் சட்டப்படியான அவற்றின் செயற்பாட்டுக்கும் வரும் சகல அச்சுறுத்தல்களையும் கடுமையாக எதிர்த்து நின்று வெற்றி கொள்ள வேண்டும். அதை அமெரிக்கா நிரூபித்திருக்கிறது என்றும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!