கனடாவுக்கான தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி!- நாடாளுமன்ற குழு அனுமதி.

அண்மையில் ஓய்வு பெற்ற விமானப்படைத் தளபதி எயர் மார்சல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் உயர் பதவிகள் பற்றிய குழு கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அஹமட்.ஏ. ஜவாட் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான தூதுவராகவும், தர்சன பெரேரா சுவீடனுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான தூதுவராகவும், டி.கே.சேமசிங்ஹ போலந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், சமிந்த கொலன்னே தாய்லாந்துக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!