தலைக்கவசம் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து: போலீசார் அதிரடி!

தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் ஊரடங்கிற்கு பின்னர் மீண்டும் பழையபடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமுறைகளை மீற தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் விதிமுறை மீறல்கள் அதிகப் படியாக காணப்படுகிறது. பெங்களூருவை பொறுத்த வரை பைக் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இது முந்தைய சட்டம் என்றாலும் சமீபத்தில் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே விதிமுறை மீறலை தடுக்க பெங்களூரு போலீசார் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் ஆர்.டி.ஓ அதிகாரிகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், லைசென்ஸ் ரத்து செய்ய ஆர்.டி.ஓ.விற்கு பரிந்துரை செய்யப்படும் விதிமுறை உள்ளது. இதனால் ஓரளவு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் லைசென்சையும் சில மாதங்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பெங்களூரு நகரில் ஒரு வாகன ஓட்டி 3 முறை ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் 3 மாதங்கள் அவர்கள் தங்கள் லைசென்சை பயன்படுத்த முடியாது. போக்குவரத்து போலீசார் தரப்பில் ஹெல்மெட் அணியாதவர்கை அடையாளம் கண்டு ஆர்.டி.ஓ.விற்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆர்.டி.ஓ. அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்யும் வாகன ஓட்டிகளின் லைசென்சை பயன்டுபடுத்த 3 மாதங்கள் தடை விதிப்பார்கள். இந்த 2 புதிய திட்டம் இரண்டு நாட்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விதியை மீறுபர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!