மொசாம்பிக் நாட்டில் சிறுவர்கள் உட்பட 50 பேரை கொடூரமாக கொன்று குவித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழு!

மொசாம்பிக் நாட்டில் கிராமம் ஒன்றில் அதிரடியாக புகுந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழு ஒன்று, சிறுவர்கள் உள்ளிட்ட 50 பேரை கொடூரமாக கொன்று குவித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழு கால்பந்து மைதான் ஒன்றில் மொத்த கிராம மக்களை ஒன்று திரட்டி, கொலைவெறித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

கிராமத்தில் உள்ள பெண்களை கடத்திச் சென்ற அந்த கும்பல் சுமார் 50-கும் மேற்பட்ட சிறார்கள் உள்ளிட்ட ஆண்களை கொன்று குவித்துள்ளது.

பெரும்பாலானோரின் தலையை வெட்டியதுடன், உடலை துண்டு துண்டாக நொறுக்கி அருகாமையில் உள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்டதில், சுமார் 15 சிறுவர்கள் விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளில் சிலர் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டபடி கிராம மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சிலர், அங்குள்ள பெண்களை மட்டுமே குறிவைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வனப்பகுதியில் சடலங்களின் குவியல் காணப்பட்ட நிலையிலேயே, பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததாகவும், அதன் பின்னரே பொலிசாருக்கும் இத்தகவல் தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.

சுமார் 20 சடலங்களை வனப்பகுதில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர். தற்போது நொறுக்கப்பட்ட உடல் பாகங்களை மட்டுமே உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

சுற்றுவட்டார கிராமங்களில் எல்லாம் இதே கும்பல் கொள்ளையடித்தும் சூறையாடியும் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2017 முதல் சுமார் 2000 அப்பாவி மக்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இங்கு கொல்லப்பட்டுள்ளதாகவும்,

சுமார் 400,000 மக்கள் அருகாமையில் உள்ள நகரங்கள் நோக்கி அடைக்கலம் தேடி சென்றுள்ளதாகவும்,

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 10,000 மக்கள் படகுகள் மூலம் தலைநகருக்கு தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!