வரவு செலவு திட்டம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெறுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம், டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நிறைவடையுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் மாலை 05 மணிக்கு வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!