நினைவேந்தலை தடை செய்யக் கூடாது! – மேல் நீதிமன்றம் மூலம் தடைபோட நடவடிக்கை.

எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்ப டுத்தல் சட்ட விதிகளையோ காரணங்காட்டி அந்த நினைவேந்தல் நிகழ்வை தடை செய்யக்கூடாதென மனுவின் ஊடாக ​கோரப்படவுள்ளது.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரியே இந்த மனுக்கள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதற்கான அறிவித்தல் பிரதிவாதிகளுக்கு, சட்டத்தரணின் ஊடாக பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம்.தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!