ஐபோன் வாங்க சீன இளைஞன் செய்த செயல்: உயிருக்கு போராடும் அவலம்!

சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்தவர் 25 வயதான இளைஞர் வாங் ஷாங்கன். இவருக்கு சிறு வயதிலிருந்தே ஐ போனை வாங்க வேண்டுமென்ற மிகப்பெரிய ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அதை வாங்க அதற்கான பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு அறிமுமான சில தவறான நட்புகளால் ஆன்லைன் கள்ளச் சந்தையில் கிட்னியை வாங்கும் நண்பர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அதை பயன்படுத்தி தனது வலது கிட்னியை 3273 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். அதை செய்த போது அவருக்கு 17 வயது.

இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் வாங்கின் கிட்னியை பெற்றுள்ளனர். அந்த பணத்தில் வாங் ஐபாட் 2 மற்றும் ஐ போன் 4 வாங்கியுள்ளார். ‘உயிர் வாழ ஒரு கிட்னி போதும்’ எனவும் வாங் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில், சில தினங்களில் அவரது மற்றொரு கிட்னியும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. மகனின் உடல்நிலையை கவனித்த வாங்கின் தாயார் அவரிடம் விசாரித்ததில் விவரத்தை அறிந்து கொண்டுள்ளார்.

இதனால், இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வாங் தினந்தோறும் டயாலாசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற மோசமான நிலையில் உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!