உத்தரவை மீறிய யுவதி – 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

பருத்தித்துறையில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி, செயற்பட்ட யுவதியால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த யுவதியொருவர், சில தினங்களுக்கு முன்னர் பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார். அதனால் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி இருந்தனர்.

குறித்த யுவதி அறிவுறுத்தல்களை மீறி ஓட்டோவில் உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிலையில், அது தொடர்பிலான தகவல்களை அறிந்து கொண்ட சுகாதார பிரிவினர், யுவதியின் குடும்பத்தினர், ஓட்டோ சாரதியின் குடும்பத்தினர், யுவதி சென்ற உறவினர் குடும்பம் ஆகிய மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேரை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!