மாவீரர் நினைவேந்தலுக்கு ஏறாவூர் நீதிமன்றம் தடை!

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏறாவூர் பொலிஸாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸாரினால் மேற்படி தடையுத்தரவு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் உட்பட அவர் சார்ந்தவர்கள், அமைப்பின் பிரதிநிதிகள் எவரும் மாவீரர் தினத்தை மட்டக்களப்பில் அனுஷ்டிக்க முடியாத வகையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!