பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமானால் அரசியல் கைதிகளுக்கு ஏன் வழங்க முடியாது?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ​செயற்பாட்டாளரான பிள்ளையானை பிணையில் விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.

“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரும் போது, அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால், பிணையில் விடுதலை செய்ய முடியாதெனவும் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்தே விடுதலை செய்ய முடியும் என்று கூறுகிறார்கள்.

“சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் எந்தவிதமான சாட்சியங்களும் இல்லை. அவர்களை சித்திரவதை செய்து பெற்றுக்கொண்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மன்னாரில் கஞ்சாவுடன் பிடிபட்ட கருணா அம்மானின் இணைப்பாளர் இனிய பாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அம்பாறையில் உள்ளவர்களால் மட்டக்களப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலத்தை பிள்ளையான தடுத்து நிறுத்தியிருந்தால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருக்காது” எனவும், சார்ள்ஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!