மற்றுமொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு!

எதிர்வரும் 30ம் திகதியளவில் இலங்கைக்கு தென்கிழக்கே புதிய தாழமுக்கம் ஒன்று தோன்றி வடக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து செல்லும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவிவியற்றுறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நிவார் புயலின் நிலை தொடர்பில் வெளியிட்டுவருகின்ற அவதானிப்பு அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும்,

“வங்காள விரிகுடாவில் உருவாகிய நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வடக்கு மாகாணத்திற்கான அதன் செல்வாக்கு படிப்படியாக குறைவடையும். நாளை அதிகாலை 2.00 மணியளவில் அது தமிழ்நாட்டின் புதுச்சேரியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் எதிர்வரும் 30ம் திகதியளவில் இலங்கைக்கு தென்கிழக்கே புதிய ஒரு தாழமுக்கம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அது வடக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து 03.12.2020 காலப்பகுதியை அண்மித்து மன்னார் வளைகுடாவுக்கு அண்மையாக கரையைக் கடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.” – என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!