போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் இந்தியா எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு!

தூத்துக்குடியில் கடல்பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே படகில் இருந்து ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த படகில் சோதனை செய்தபோது 30 டன் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்து 10 கைத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து இந்திய கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!