தடை கேட்டு பருத்தித்துறை நீதிமன்றுக்கு பொலிஸ் அதிகாரிகள் படையெடுப்பு!

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் மீளவும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னதாக 3 விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று முன்தினம் மீளப்பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!