சென்னையை புரட்டியெடுத்த நிவர் புயல்!

நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றால் சென்னையில் மரம் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது.

இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பகுதியில் பதிவான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில், சாலையில் ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருக்கிறார், அப்போது ஒரு மரம் அப்படியே அவர் மீது விழுவது போல உள்ளது.

குறித்த நபர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!