மக்களின் எதிர்ப்பை மீறி பிரான்சில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம்!

மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரான்சில் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக பாதுகாப்பு மசோதாவில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 24ஆவது பிரிவின்படி, பொலிசாருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களது புகைப்படங்களை பிரசுரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிரதமர் Jean Castex மட்டும், இந்த சட்டம் சட்டப்படி பொதுமக்களுக்கு அளிக்கவேண்டிய தகவல்களை தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசியல் விமர்சகர்களும், இது கவலையை ஏற்படுத்தக்கூடிய செய்தியை அனுப்புவதற்கு சமம் என்று தெரிவித்துள்ளரகள்.

Amnesty International France அமைப்பின் தலைவரான Cecile Coudriou கூறும்போது, மக்கள் எதையுமே படம்பிடிக்கக்கூடாது என்றால், அதுவும் குறிப்பாக, தெருக்களில் பொலிசார் சட்ட விரோதமாக தங்கள் பலத்தைக் காட்டும் நேரத்தில் அவர்கள் படம் பிடிக்கக்கூடாது என இந்த சட்டம் கூறுமானால், அது மிக கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால், பணியிலிருக்கும் பொலிசாருக்கு உடல் அல்லது மன ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர்களது புகைப்படங்களை பகிர்பவர்களுக்கு ஓராண்டு சிறையும், அதிகபட்சமாக 45,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.

பத்திரிகையாளர்களோ அல்லது பொதுமக்களோ பகிரும் படங்களில் உள்ள பொலிசாரின் முகங்கள் மங்கலாக்கப்படவேண்டும் (blur) என்றும் கூறுகிறது அந்த சட்டம்!ள்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!