ஹொங்ஹொங்கில் இன்ஸ்டாகிராம் பதிவால் இளம் தாய்க்கு நேர்ந்த கதி!

சமூக ஊடக பிரபலம் மற்றும் அவரது பிஞ்சு குழந்தையை கயிறால் பிணைத்து, கத்தி முனையில் சுமார் 400,000 பவுண்டுகள் பெருமதி கொண்ட பொருட்களை கும்பல் ஒன்று கொள்ளையிட்டு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்ஹொங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பட்டப்பகலில் இந்த துணீகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கத்தியுடன் முகமூடி அணிந்த மூவர் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய 25 வயதான So Mei-yan, பகல் 11 மணியளவில், குடியிருப்புக்குள் புகுந்த மூவர் கும்பல் சுமார் 400,000 பவுண்டுகள் பெருமதியான விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது தாமும், 6 மாதமான தமது குழந்தையும், பணியாளரான பெண்மணி ஒருவருமே குடியிருப்பில் இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், So Mei-yan அளித்த புகார் உண்மை என உறுதியாகியுள்ளது.

மேலும், கொள்ளையர்கள் வெளியேறிய சில நிமிடங்களில் So Mei-yan பொலிசாரை தொடர்புகொண்டு நடந்தவற்றை புகாராக தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் அப்பகுதியை சோதனையிட்டனர், ஆனால் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால், நடந்த சம்பவங்கள் அனைத்தும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளதாகவும், தற்போது அந்த மூவரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டு, அவர்கள் மூவரும் சீனர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, So Mei-yan தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் இதுவரை சேகரித்து வைத்துள்ள விலையுயர்ந்த பொருட்களை மொத்தமாக வெளியிட்டதாகவும், அதுவே கொள்ளை சம்பவத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர்.

இதனிடையே கொள்ளையர்கள் தொடர்பில் உறுதியான தகவல் தெரிவிப்பவர்களுக்கு சப்மானமாக 194,000 பவுண்டுகள் வழங்க இருப்பதாக So Mei-yan தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!