கொரோனா அச்சம்: இருவரை தூக்கு மேடைக்கு அனுப்பி கிம் ஜாங் அன் அடாவடி!

உலகின் மர்மதேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. இந்த நாட்டின் அதிபர் கிம் ஜங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா மண்ணில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு பெருமிதப்படுகிறது. எனினும், சீனா, தென்கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக பல கடுமையான நடவடிக்கைகளையும் வடகொரியா அரசு எடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிகட்டும் வகையில் கிம் ஜாங் அன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாய் அமைந்துள்ளது. அதாவது, பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாகக் கூறி உயர் அந்தஸ்து கொண்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையை கிம் ஜாங் அன் அரசு நிறைவேற்றியுள்ளது. அதேபோல், கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், வடகொரிய கடலில் மீன்பிடிக்க தடை விதித்தும், தலைநகர் பியோங்யாங் நகரில் பொது முடக்கத்தை அமல்படுத்தியும் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல்களை தென்கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுன் இணக்கமாக நடந்து கொள்ள கிம் ஜாங் ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!