வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் வைத்த கோரிக்கை!

பைடனின் வெற்றியை உறுதி செய்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில், 538 எலெக்ட்ரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழு உறுப்பினர்களில், பைடனுக்கு 306 பேரின் டிரம்ப்பிற்கு 232 பேரின் ஆதரவும் உள்ளது.

வரும் டிசம்பர் 14-ஆம் திகதி எலெக்ட்ரல் காலேஜ் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி பைடனின் வெற்றியை உறுதி செய்ய உள்ளனர்.

இந்நிலையில், டிரம்ப்பிடம், பைடனின் வெற்றியை எலெக்டரல் காலேஜ் உறுதி செய்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, டிரம்ப், நிச்சயமாக வெளியேறுவேன். இதனை நீங்கள் அறிவீர்கள். பைடனின் வெற்றியை அங்கீகரித்தால் , அவர்கள் பெரிய தவறை செய்வார்கள். தற்போது முதல் ஜனவரி 20-ஆம் திகதிக்குள் நிறைய விஷயங்கள் நிகழும்.

இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பதில் அளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!