கடந்த 24 மணித்தியாலங்களில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றையதினம் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதற்கமைய, கொழும்புமாவட்டத்தில் 138 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் பொரளை பிரதேசத்தில் இருந்து 42 பேரும் மட்டக்குளிய பகுதியில் இருந்து 32 பேரும் கிரான்ட்பாஸ் பகுதியில் இருந்து 11 பேரும் வெல்லம்பிட்டி மற்றும் கொத்தட்டுவ ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒன்பது பேரும், தெஹிவளை பிரதேசத்தில் இருந்து 6 பேரும் கொட்டாஞ்சேனை பகுதியில் இருந்து ஐவரும் புதுக்கடை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இருந்து தலா நால்வரும் கொம்பெனித்தெரு , கிருலப்பனை, தெமட்டகொட, இரத்மலானை, அங்குலான ஆகிய பகுதிகளில் இருந்து தலா இருவர் வீதமும், புறக்கோட்டை கடுவலை பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒருவர் வீதமும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹாமாவட்டத்தில் 63 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வத்தளை பிரதேசத்தில் இருந்து 17 பேரும் பியகம பகுதியில் இருந்து 10 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில்இருந்து 35 பேரும் குருணாகல் மாவட்டத்தில் 14 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கேகாலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஐவர் வீதமும் களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா மூவர் வீதமும் யாழ்ப்பாணம், மொனராகலை காலி அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 431 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்அவர்களுள் 12 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் மூவாயிரத்து 59 பேரும் பேலியகொடை மீன்சந்தை வளாகத்துடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 372 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 107 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதுவரை 16 ஆயிரத்து 226 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் மேலும் 6 ஆயிரத்து 168 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனிடையே முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 47 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 5 ஆயிரத்து 88 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றையநாளில் 13 ஆயிரத்து 286 பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!